Sunday, December 04, 2005

திரைக் கவிதைகள் [நிறைவு]

ஒரு வழியாக நம் நாயகி காதலனைச் சந்திந்துத் தன் காதலைக் கூறுகிறாள். இப்பொழுது அவன் மனம் எந்த அளவிற்கு ஆனந்தம் அடைந்திருக்கும், என்பதைப் பின்வரும் பாடல் அழகாக உணர்த்துகிறது.

காதல் சொன்ன கணமே
கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் மாறுது மனமே …………..
[பாய்ஸ்}

சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளித் துள்ளிப் போகுதே..............................................

புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளிப் பருகுதே............................

[காக்க காக்க]

எனக்குப் பிடித்த காதல் கவிதைகளை ஒரு கதை வடிவில் வரிசைப் படுத்தினேன். அவ்வளவே. நிஜமான கதை படிக்கும் எண்ணத்தில் எப்படி இருவரும் இணைந்தனர் என்றெல்லாம் எண்ண வேண்டாம். என்னைக் கவர்ந்த மற்ற கவிதைகளும் இங்கே,,,,,,,,,,,,,,,,,,,,,,

மேல் இமைகளில் நீ.......
கீழ் இமைகளில் நான்…..
இந்தக் கண்கள் கொஞ்சம்
தூங்கினால் என்ன ?
[சதுரங்கம் ]

பூக்கள் மலரும்போது ஏற்படும் மெல்லிய ஓசையினால் தன் காதலி விழித்துக்கொள்வாளோ என நாயகன் கருதுவது போலவரும் இந்த பாடல்

மொட்டுகளே மொட்டுகளே
மூச்சுவிடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகிறாள்
காலையில் மலருங்கள்
பொன் அரும்புகள் மலர்கயிலே
மென்மெல்லிய சப்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காது...

[ரோஜாக் கூட்டம்]

சங்கமிக்கும்
இரண்டு ஊதுபத்திப் புகையின்
அசைவில்
நீ............ நான்,,,,,,,,,,,,,,,,,,,,

[முற்றும்]

Thursday, December 01, 2005

திரைக் கவிதைகள் [2]

நாயகன் விட்டுச் சென்ற பின்பே, தனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை காதலி உணர்கிறாள். அவளது எண்ணங்கள் கவிதையாக,

பூமியென்பது தூரமானதே
நட்சத்திரங்கள் பக்கமானதே.............
மனிதர் பேசும் பாஷை மறந்து
பறவைகளோடு பேசத் தோன்றுதே............

தன் மன மாற்றத்திற்குப் பெயர்தான் காதலா என நினைக்கிறாள்.
          
இது காதலா  
இதுதான் காதலா
இதுவே காதலா
இதுவும் காதலா ?..............             [பூவேலி ].

தன் காதலை உணர்ந்து காதலனை நினைத்துப் பாடுகிறாள் இவ்வாறு.................

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டுச் சென்றாயே................. [ஆறு ]

பின்பு தன் காதலனைத் தேடத் தொடங்குகிறாள் காதலும் கவிதையுமாக பின்வருமாறு.

பூங்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்  [உயிரே]

இதற்கிடையே காதலனும்,
     தாமதிக்கும் ஒவ்வொரு கனமும்
     தவணை முறையில் மரணம் நிகழும்
     அருகில் வாராயோ விரல்கள் தாராயோ நீ......................................  [காக்க காக்க]

என காதலியின் வருகைக்காக உருகுகிறான்.  இருவரும் சந்தித்தனரா?

திரைக் கவிதைகள்

எனக்குப் பிடித்த, நான் ரசித்த சில திரைக் கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
தனக்கு ஒரு காதலி கிடைக்க மாட்டாளா என்று தேடி அலைகிறான் நம் நாயகன். அவனது தேடலைக் குறிக்கிறது பின்வரும் கவிதை.

          தண்டவாளத்தில்
தலைசாய்த்துக் காத்திருக்கும்
ஒற்றைப்பூ
என் காதல்....................
நீ இரயிலில் வருகிறாயா ?
நடந்து வருகிறாயா ?               [ சதுரங்கம் ]
    
இப்படி காதலியின் வருகைக்காக காத்திருக்கும் காதலன், தன் மனதைக் கவர்ந்த பெண்ணைக் கண்டவுடன்,
          முதன்முதலாய் உன்னைப் பார்க்கிறேன்
          ஒன்றைக் கேட்கிறேன்
          என்னைத் தெரிகிறதா ?
என்று கேட்கிறான். “முதல்முறையாகப் பார்ப்பதாக நீயே கூறிவிட்டு பின்பு தெரிகிறதா என்று கேட்டாள் என்ன கூறுவது” என காதலி கேட்பதற்கு முன்பு அவனே தொடர்கிறான்,
          ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்
          அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா ?......
[ வருஷமெல்லாம் வசந்தம்]

இப்படியாக நாயகன் தன் முதல் சந்திப்பிலேயே காதலைக் கூற, அவள் நிராகரித்துச் சென்று விடுகிறாள்.

ஆயினும் அவளுக்குத் தன் காதலை, தன் வருத்தத்தை உணர்த்த நினைக்கிறான் பின்வரும் வரிகள் மூலம்......
     நீயாக நீ என்னை
     விரும்பாத போதும்
     பொய் ஒன்று சொல் கண்ணே
     என் ஜீவன் வாழும்          [ காதல் தேசம், வாலி ]

     ஒரு பொய்யாவது சொல் கண்ணே
     உன் காதல் நான்தான் என்று.....
     அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்........  [ ஜோடி, வைரமுத்து ]

அப்படி இருந்தும் காதலை ஏற்றுக் கொள்ள அவள் மறுத்ததால்,
காதலன் அவளிடம் விடைபெற்று கிளம்புகிறான் இவ்வாறு.

     காதல் வந்தால் சொல்லி அனுப்பு
     உயிரோடிருந்தால் வருகிறேன்
தொடர்ந்து,
     கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
     கடல் நீர் மட்டம் கூடுதடி..................            [ இயற்கை ]

அவனது காதலை அவள் ஏற்றுக் கொண்டாளா????
Free Web Counter
Free Hit Counter