Thursday, December 01, 2005

திரைக் கவிதைகள்

எனக்குப் பிடித்த, நான் ரசித்த சில திரைக் கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
தனக்கு ஒரு காதலி கிடைக்க மாட்டாளா என்று தேடி அலைகிறான் நம் நாயகன். அவனது தேடலைக் குறிக்கிறது பின்வரும் கவிதை.

          தண்டவாளத்தில்
தலைசாய்த்துக் காத்திருக்கும்
ஒற்றைப்பூ
என் காதல்....................
நீ இரயிலில் வருகிறாயா ?
நடந்து வருகிறாயா ?               [ சதுரங்கம் ]
    
இப்படி காதலியின் வருகைக்காக காத்திருக்கும் காதலன், தன் மனதைக் கவர்ந்த பெண்ணைக் கண்டவுடன்,
          முதன்முதலாய் உன்னைப் பார்க்கிறேன்
          ஒன்றைக் கேட்கிறேன்
          என்னைத் தெரிகிறதா ?
என்று கேட்கிறான். “முதல்முறையாகப் பார்ப்பதாக நீயே கூறிவிட்டு பின்பு தெரிகிறதா என்று கேட்டாள் என்ன கூறுவது” என காதலி கேட்பதற்கு முன்பு அவனே தொடர்கிறான்,
          ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்
          அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா ?......
[ வருஷமெல்லாம் வசந்தம்]

இப்படியாக நாயகன் தன் முதல் சந்திப்பிலேயே காதலைக் கூற, அவள் நிராகரித்துச் சென்று விடுகிறாள்.

ஆயினும் அவளுக்குத் தன் காதலை, தன் வருத்தத்தை உணர்த்த நினைக்கிறான் பின்வரும் வரிகள் மூலம்......
     நீயாக நீ என்னை
     விரும்பாத போதும்
     பொய் ஒன்று சொல் கண்ணே
     என் ஜீவன் வாழும்          [ காதல் தேசம், வாலி ]

     ஒரு பொய்யாவது சொல் கண்ணே
     உன் காதல் நான்தான் என்று.....
     அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்........  [ ஜோடி, வைரமுத்து ]

அப்படி இருந்தும் காதலை ஏற்றுக் கொள்ள அவள் மறுத்ததால்,
காதலன் அவளிடம் விடைபெற்று கிளம்புகிறான் இவ்வாறு.

     காதல் வந்தால் சொல்லி அனுப்பு
     உயிரோடிருந்தால் வருகிறேன்
தொடர்ந்து,
     கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
     கடல் நீர் மட்டம் கூடுதடி..................            [ இயற்கை ]

அவனது காதலை அவள் ஏற்றுக் கொண்டாளா????

0 Comments:

Post a Comment

<< Home

Free Web Counter
Free Hit Counter