Sunday, November 20, 2005

உரைநடை ஆசிரியர்கள் குறித்து..........

உரைநடை ஆசிரியர்கள் குறித்து............


சமீபத்தில் பட்டிமன்றம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். கம்பராமாயணத்தில் வரும் சில வரிகளுக்கு வெவ்வேறு பொருள்களைக் கூறி இரு தரப்பினரும் விவாதம் நடத்திக் கொண்டிருந்தனர்.  பாடலை எழுதியவரே விளக்கத்தையும் எழுதினால் நன்றாக இருக்குமே, இத்தகைய விவாதங்களும் இல்லாமல் போயிருக்குமே என என்னுடைய எண்ணங்கள் வேறு திசையில் செல்லத் தொடங்கின..............

உரைநடையாளர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் பொருட்டு கவிஞர்கள் சாதாரணமாக எழுதியவற்றைக் கூட சிறப்பாகக் கூறி அவர்களுக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுப்பது சாத்தியமாகின்றது.

எடுத்துக்காட்டாக கம்பனின் திறனை அறிவதற்காக கூறப்படும் கதையையும் பாடலையும் நோக்கலாம்........

மன்னனைப் புகழ்ந்து சிறப்பான கவிதை எழுதுபவருக்கு பரிசு கொடுக்கப்போவதாக நாடு முழுவதும் முரசு தட்டப்படுகின்றது......
இதைக் கேட்ட ஒரு பெண் தன் கணவனையும் கவிதை எழுதுமாறு கூறினாள். என்ன எழுதுவது என அவன் கேட்க ‘கன்னா பின்னா’ என்று எதை வேண்டுமானாலும் எழுது என்று அவள் கூறினாள்.

மறுநாள் அரசவை நோக்கி அவன் கிளம்பினான். வழியில் ‘மன்னா தென்னா’ என இருவர் பேசிக்கொள்வதை கவனித்து எழுதிக்கொண்டான். இன்னும் சற்று தூரம் செல்ல, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்கள் ஒரு சிறுவனை ‘மண்ணுண்ணி மாப்ளே’ என்று கிண்டலடிப்பதைக் கேட்டு அதையும் எழுதிக்கொண்டான்.

அரச சபையில் தான் கேட்ட அனைத்தையும் சேர்த்து,

‘ கன்னா பின்னா
  மன்னா தென்னா
   மண்ணுண்ணி மாப்ளே’

எனச் சேர்த்துக் கூறி தன் கவிதையை முடித்தான். இதைக் கேட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க, அங்கு புலவராக இருந்த கம்பர் மட்டும் அவன் கவிதையைப் புகழ்ந்து பரிகளைக் கொடுத்தார். இப்படிப்பட்ட ஒரு உளரலுக்குப் பரிசா என அனைவரும் கேட்க, அது உளரல் இல்லை, அழகான கவிதை என்று கூறி அதன் விளக்கத்தைக் கம்பர் கூறினார்.

கம்பரது விளக்கம் :

கன்னா பின்னா -- தானம் கொடுப்பதில் வள்ளலாகிய கர்ணனுக்குப் பின்னால் அவனைப் போன்று தோன்றிவரே  
மன்னா தென்னா தென் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் மன்னவனே
மண்ணுண்ணி மாப்ளே --- மண்ணை உண்டவர் கிருஷ்ணர். அவரது மாப்பிள்ளை முருகப் பெருமான். அத்தகைய முருகனைப் போன்று அழகிலும் வீரத்திலும் சிறந்தவரே

என இவ்வாறு பொருள் கூறினார்.

சில நேரங்களில் கவிதை சிறப்பாக இருந்து விளக்கம் தெளிவாக அமையவில்லை என்றாலும் பிரச்சினையே. உரைநடையாளர்களால்
கவிதை/ செய்யுளின் சுவை கூடுவதென்றாலும் எழுதியவர்களே விளக்கத்தையும் அளித்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்றே என் இன்றைய எண்ணங்கள் செல்கின்றன.
Free Web Counter
Free Hit Counter