Sunday, December 04, 2005

திரைக் கவிதைகள் [நிறைவு]

ஒரு வழியாக நம் நாயகி காதலனைச் சந்திந்துத் தன் காதலைக் கூறுகிறாள். இப்பொழுது அவன் மனம் எந்த அளவிற்கு ஆனந்தம் அடைந்திருக்கும், என்பதைப் பின்வரும் பாடல் அழகாக உணர்த்துகிறது.

காதல் சொன்ன கணமே
கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் மாறுது மனமே …………..
[பாய்ஸ்}

சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளித் துள்ளிப் போகுதே..............................................

புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளிப் பருகுதே............................

[காக்க காக்க]

எனக்குப் பிடித்த காதல் கவிதைகளை ஒரு கதை வடிவில் வரிசைப் படுத்தினேன். அவ்வளவே. நிஜமான கதை படிக்கும் எண்ணத்தில் எப்படி இருவரும் இணைந்தனர் என்றெல்லாம் எண்ண வேண்டாம். என்னைக் கவர்ந்த மற்ற கவிதைகளும் இங்கே,,,,,,,,,,,,,,,,,,,,,,

மேல் இமைகளில் நீ.......
கீழ் இமைகளில் நான்…..
இந்தக் கண்கள் கொஞ்சம்
தூங்கினால் என்ன ?
[சதுரங்கம் ]

பூக்கள் மலரும்போது ஏற்படும் மெல்லிய ஓசையினால் தன் காதலி விழித்துக்கொள்வாளோ என நாயகன் கருதுவது போலவரும் இந்த பாடல்

மொட்டுகளே மொட்டுகளே
மூச்சுவிடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகிறாள்
காலையில் மலருங்கள்
பொன் அரும்புகள் மலர்கயிலே
மென்மெல்லிய சப்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காது...

[ரோஜாக் கூட்டம்]

சங்கமிக்கும்
இரண்டு ஊதுபத்திப் புகையின்
அசைவில்
நீ............ நான்,,,,,,,,,,,,,,,,,,,,

[முற்றும்]

2 Comments:

Blogger Dr.Srishiv said...

மேல் இமை நீ
கீழ் இமை நான்
திருக்குறளாய் கவிதை சொன்னேன்...
மேல் இமை நீ
பிரிந்துவிட்டால்
பொருள் படுமோ காதல் கண்ணே..

(பிரிவொன்றை சந்தித்தேன் முதன்முதல் நேற்று...பிரியாத வரம் வேண்டும்...)

10:28 PM  
Blogger Govind said...

இப்பாடல் என் நினைவிற்கு வந்தது... ஆயினும் வரிகளை கோர்வையாக நினைவூட்ட முடியாததால் எதற்கு வம்பு என்று எழுதாமல் விட்டேன்...

சரியாகக் கண்டுபிடித்து நினைவூட்டியதற்கு நன்றி.

11:44 AM  

Post a Comment

<< Home

Free Web Counter
Free Hit Counter